இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்று !

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் இன்று !

இந்தியாவின் 78 ஆவது சுதந்திரதினம் வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் இன்று கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை நினைவுக்கூரும்
வகையில் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திர தினம் கோலாகலமாகக்
கொண்டாடப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மக்களும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்களும் சுதந்திர தினத்தை தேசிய விடுமுறையாக கொண்டாடி வருகின்றனர்.

சுதந்திர தினத்தன்று மாநில தலைநகரங்களில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள்
நடைபெறுகின்றன.

டெல்லியில் நடைபெறும் பிரதான நிகழ்வில் பிரதமர் பங்கேற்கிறார்.

கொடியேற்ற விழா நடந்த பிறகு ஆயுதப்படை மற்றும் பொலிஸ் துறையினர் அணிவகுப்பு நடத்தப்படும்.

இன்று 78- ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்படும் நிலையில், டில்லி செங்கோட்டையில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றவுள்ளார்.

தலைநகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து பொலிசார் , 10 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

700 ஏ.ஐ அடிப்படையிலான கண்காணிப்பு கமராக்களும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

விமான நிலையம், ரயில்நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூடுதல் பொலிசார் மற்றும்
துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு விருந்தி
னர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான சுதந்திர தின
விழா, ‘

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )