அரிசிப் பொரி சாப்பிட்டிருக்கிறீர்களா ?

அரிசிப் பொரி சாப்பிட்டிருக்கிறீர்களா ?

அரிசியைப் பொரிப்பதன் மூலம் தயாராவது அரிசிப் பொரி. ஆனால், அதனை உட்கொள்வது சரியா? இல்லையா? என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு உண்டு.

உண்மையில் இந்த அரிசிப் பொரியில் நார்ச்சத்து, துத்தநாகம், இரும்பு, விட்டமின் ஏ, விட்டமின் சி, புரதம் ஆகிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

அரிசிப் பொரியிலுள்ள நன்மைகள்

  • இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், தாதுக்கள் போன்றன நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
  • ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.
  • இதில் உள்ளடங்கியுள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
  • இதில் சோடியம் குறைவாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும்.
  • உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கு இதுவொரு சிறந்த தெரிவாக இருக்கும். காரணம் இதில் கலோரிகள் குறைவாகவே இருக்கும்.|
  • இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
  • எலும்புகளை வலுப்படுத்தும்.
  • கல்சியம், இரும்பு, விட்டமின் டி போன்றவை எலும்புகளிலுள்ள செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
  • வயிறு, குடலில் சேரும் உணவுத் துகள்களை உடைத்து ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு உதவி செய்யும்.
  • தோல் சுருக்கம், கரும்புள்ளிகள் போன்றவற்றை தடுக்கும்.
  • வயதாகும் அறிகுறியை தள்ளிப்போடும்.
  • மாரடைப்பு, இரத்த குழாய்களில் அடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )