தொடரும் மீட்பு பணி ; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் திகதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன.
வீடுகள் புதையுண்டதோடு, பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவு, கேரளாவின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதுவரை நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று 15-வது நாளாக மீட்பு பணி நடைபெறுகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலியாற்றில் இருந்து இதுவரை 245 உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES India