மீந்து போன இட்லி இருக்கா ?
மீந்து போன இட்லியை தூக்கிப் போடாம, அதை வெச்சு முட்டையுடன் சேர்த்து ஒரு சுவையான மற்றும் ஹெல்த்தியான உணவு செய்யலாம்.
இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
- இட்லி – 3
- முட்டை – 2
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை – 1 துண்டு
- ஏலக்காய் – 1
- கிராம்பு – 2
- பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
- வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
- தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
- உப்பு – சுவைக்கேற்ப
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
- மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் மீந்து போன இட்லிகளை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் சிறிது உப்பு சேர்த்து, கரம் மசாலா தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
இறுதியாக அதில் கொத்தமல்லி மற்றும் மிளகுத் தூளைத் தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான முட்டை இட்லி தயார்.