இஸ்ரேல் தாக்குதலில் 25 பலஸ்தீனர்கள் பலி !
அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாரின் அழைப்பின் பேரில் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நாளை மறுதினம் (15) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில்,
புதிய போர் நிறுத்தத் திட்டத்திற்கு பதில் முந்தைய போர் நிறுத்த திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஹமாஸ்
அமைப்பு மத்தியஸ்தர்களை கேட்டுள்ளது.
காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு அதன் உத்தியோகபூர்வ டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
‘அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் மே 31 ஆம் திகதி முன்மொழியப்பட்டு ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானத்தால் உறுதி செய்யப்பட்டு மே 6 ஆம் திகதி கட்டார் மற்றும்
எகிப்து மத்தியஸ்தர்களால் முன் வைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்ப டையில் பேச்சுவார்த்தை அமைய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பு முன்னர் ஏற்றுக் கொண்டு இஸ்ரேலால் நிராகரிக்கப்பட்ட மே 6 இல் முன்வைக்கப்பட்ட திட்டத்தின்படி, காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் கணி
சமான பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு இஸ்ரேலிய சிறையில் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருந்தது.
‘இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை மூடிமறைக்கும் மற்றும் நமது மக்களுக்க எதிரான அதன் இனப்படுகொலையைத் தொடர கூடுதல் கால அவகாசம் வழங்கும் பேச்சுவார்த்தைகள் அல்லது புதிய திட்டங்களைத் தொடருவதற்குப் பதிலாக இந்தத் திட்டத்தை (மே 6 முன்
மொழிவு) மத்தியஸ்தர்கள் செயற்படுத்த வேண்டும்’ என்று ஹமாஸ் அமைப்பு விடுத்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 15 ஆம் திகதி போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தமது தரப்பு பிரதிநிதிகளை அனுப்புவதற்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது.
எனினும் ஹமாஸ் அமைப்பு பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை.
எனினும் பைடனின் போர் நிறுத்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் புதிய நிபந்தனைகளை சேர்த்தது ஹமாஸ் தரப்பின் எதிர்ப்புக்கு காரணமானது.
இதில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்புவதற்கு அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் எகிப்துடனான காசா எல்லை பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையே இஸ்ரேல் முன்வைத் திருப்பதாக தெரியவருகிறது.
இந்நிலையில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு தெற்கு நகரான கான் யூனிஸில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அங்கிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்காக மக்கள் உணவு மற்றும் நீர் இன்றி வீதி ஓரங்களில் உறங்கி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்து 25 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி கடந்த 10 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்தில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,897 ஆக அதிகரித்துள்ளதோடு மேலும் 92,152 பேர்
காயமடைந்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசா மக்கள் தொகையில் 1.8 வீதமான மக்களை இஸ்ரேலிய படை கொன்றிருப்பதாகவும் வர்களில் 75 வீதமானவர்கள் 30வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பலஸ்தீன மத்திய புள்ளிவிபர
அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.