ஜனாதிபதியின் அரசியல் அனுபவம் நாட்டை வீழ்ச்சியிலிருந்து மீட்க உதவியது !
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவமும், சர்வதேச உறவுகளும், வேலைத்திட்டங்களும் இந்த நாட்டை மீட்பதற்கு வழிவகுத்துள்ளதாக ஜனாதிபதியின்
தலைமை செயலணி அதிகாரியும் சிரேஷ்ட ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகருமான
சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்காக ஹோமாகம தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணிரங்க அபேசிங்க ஏற்பாடு செய்திருந்த விசேட அங்கத்தவர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
எமக்கு எவ்வளவு அரசியல் அனுபவம் இருந்தாலும், எத்தனை சர்வதேச உறவுகள்
இருந்தாலும் எமக்கு திட்டம் இல்லையென்றால், எம்மால் கடந்து செல்ல முடியாது.
ஜனாதிபதிக்கு ஒரு திட்டம் இருந்தது. எனவே, அச்சமின்றி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மக்களும் ஆதரித்தனர். அதனால்தான் இவ்வளவு சீக்கிரம் மீண்டு வர முடிந்தது.
அதேநேரத்தில் எரிவாயு இல்லை,எண்ணெய் இல்லை, மருந்து இல்லை, நம் நாடு முற்றிலும் வீழ்ச்சியடைந்தது. பல தலைவர்கள் காணாமல் போயிருந்தவேளையில் ரணில் விக்கிரமசிங்கவே முன்வந்தார்.
கட்சி வேறுபாடின்றி அனைத்து எம்பிக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அதனால் வீழ்ந்திருந்த நாட்டை பாதாளத்திலிருந்து மீட்க முடிந்தது.
நமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். ரணில் விக்கிரமசிங்க எங்கள் கட்சியின் தலைவர். ஆனால், இம்முறை அனைவரினதும் தலைவராக கட்சியின்றி, சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
பாராளுமன்றத்தில் எமது கட்சிக்கு ஒரேயொரு உறுப்பினரே இருந்தபோது, பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை யினரின் நம்பிக்கையை வெல்லும் திறமை ரணில் விக்கிரமசிங்கவுக்கே இருந்தது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர் இந்த நாட்டின் தலைவரானார். நாடு ஒரு இக்கட்டான நிலைக்குச் சென்றுவிட்டது. பொருளாதாரத்தில் நாம் முற்றிலும்
வீழ்ச்சியடைந்தோம்.
பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அவரது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பலமளித்தன.
கட்சி சார்பற்று இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதன் காரணமாகவே அவரால் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்தது.
இந்த நாட்களில் பங்களாதேசத்தில் நடப்பதை பார்க்கும் போது, அக் காலம் மீண்டும் நினைவுக்கு வருகின்றது.
உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதில் இருந்து எம்மைக் காப்பாற்றியவர் தற்போ
தைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே.
அவரது அரசியல் அனுபவம், பாரம்பரியம், சர்வதேச உறவுகள், வேலைத்திட்டம் போன்றவற்றின் காரணமாகவே, இந்த நாட்டை அவரால் கட்டியெழுப்ப முடிந்தது.
எமக்கு எவ்வளவு அரசியல் அனுபவம் இருந்தாலும், எத்தனை சர்வதேச உறவுகள் இருந்தாலும், திட்டம் இல்லையென்றால், எம்மால் கடந்து செல்ல முடியாது.
அவர் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். அதனை அச்சமின்றி செயல்படுத்தினார். இதற்கு மக்களும் ஆதரவளித்தனர். அதனால்தான் இவ்வளவு விரைவாக மீண்டுவர முடிந்தது.
முதலாவதாக அவரது தலையீட்டினால் பல நாடுகளின் உதவியோடு சிறுபோகத்திற்கு தேவையான உரங்களை பெற முடிந்தது.
மிகக் கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டே, இந்த நாட்டை தற்போதைய நிலைக்குக் கொண்டுவரக்கூடிய திறன் அவருக்கு இருந்தது.
அக் காலப்பகுதியில் ஜனாதிபதி ஒரு கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை. அது அரசியல் ரீதியாக எங்கள் கட்சிக்கு இழப்பு.
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று எமது கட்சியின் தலைவராக இருந்தபோது, மொட்டுக்கட்சி அமைச்சர்கள் எம்மை முந்திச்சென்றபோது எமக்கு வருத்தம் ஏற்பட்டது.
ஆனால், அனைவரும் ஒன்றிணைந்து அவரை ஜனாதிபதியாக்கினார்கள்.
இப்போது மீண்டும் அதனையே நாம் செய்ய வேண்டும். இம்முறையும் அதை நாம் முன்னின்று செய்ய வேண்டும். ஆனால் மற்றவர்களை ஒதுக்கி வைப்பதும் நல்லதல்ல.
அவ்வாறு செய்யக்கூடாது. இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். நாம் தொடர்ந்து தலைமைக்கு உதவ வேண்டும். நாம் விரும்பும் இடத்தில்அதைச் செய்ய வேண்டும். நாம் ஒரு நாற் காலியை பின்னால் நகர்த்தி யாரையாவது அனுமதிக்க விரும்பினால், நாம் அதை அனுமதிக்க வேண்டும்.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது தலைவரை நாட்டின் தலைவராக மாற்றியமைத்துள்ளனர்.
அதனை நாம் மீண்டும் சாத்தியப்படுத்த வேண்டும் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். அவர்களின் ஒப்பந்தத்தின் படி, நாங்கள் செயற்படுகின்றோமா என்பதை IMF ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்காணித்து வருகிறது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் விதிகளை மீறினாலோ, ஒப்பந்தத்தின்படி செயல்படவில்லையென்றாலோ, மீண்டும் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு இணங்குவதற்கு தாமதமாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி செயற்படாவிட்டால், மார்ச் மாதத்திற்குள் மீண்டும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும். நாங்கள் மீண்டும் வீதிக்குச் சென்றால், வரிசையில் நின்றால், வீடுகளுக்குள் செல்ல வழியின்றி அங்கேயே நிற்க நேரிடும்.
எமக்கு உதவுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். சர்வதேச நாணய நிதி உதவி நிறுத்தப்பட்டால், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவுவதை நிறுத்திவிடும். இவை நிறுத்தப்படுமாகயிருந்தால், எமது அந்நிய செலாவணி கையிருப்பும் நின்றுவிடும். சர்வதேச நம்பிக்கை மறுபுறம் சரிந்து விடும். நாம் மீண்டும்
2022 இல் இருந்த பழைய இடத்திற்குச்செல்ல நேரிடும்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையும், அந்நியச் செலாவணி வருமானமும் நின்றுவிடும். நாம் மீண்டும் சிக்கிக்கொள்ள முடியாது. இந்தப் பயணத்தை நாம் வெற்றிகரமாகச் செல்ல வேண்டும்.
கிராம மக்களுக்கு உண்மைகளை விளக்கிஇந்த அபாயம் குறித்து நன்கு தெரிவிக்க
வேண்டும். பங்களாதேஷின் நிலைமைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு நம் நாடு செல்லும்.
அந்த நிலைக்கு நாம் திரும்ப முடியாது. எனவே, ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி
பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதியின் தலைமை செயலணி அதிகாரியும் சிரேஷ்ட ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்