உக்ரேன் ஜனாதிபதியை கொல்ல திட்டம்

உக்ரேன் ஜனாதிபதியை கொல்ல திட்டம்

உக்ரேன் மீது இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 2 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா படையெடுத்தது. உக்ரேனின் கீவ், கார்கிவ், ஒடிசா, மரியுபோல் மற்றும் டோனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை போர் தொடக்கத்தில் ரஷ்யா கைப்பற்றியது. ஆனால் அந்நகரங்களை உக்ரேன் மீண்டும் தன்வசப்படுத்தி கொண்டது.

இந்நிலையில், சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விடயத்தில் உக்ரேனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.

உக்ரேன் அரசின் பாதுகாப்பு பிரிவில் அங்கம் வகிக்கும் கர்னல்கள் 2 பேர் பணம் பெற்று கொண்டு அதற்கு பதிலாக, உக்ரேனுக்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரில் ஒருவர் பயங்கரவாத செயலுக்கு தயாரான குற்றச்சாட்டும் உள்ளது. இருவர் மீதும் தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

இவர்களில் ஒருவர் ரஷ்ய பாதுகாப்பு பிரிவிடம் இருந்து 2 ஆளில்லா விமானங்களையும் மற்றும் வெடிபொருட்களையும் பெற்றுள்ளார். அவற்றை மற்றொரு கூட்டாளிக்கு கொடுத்து, குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என உக்ரேனின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அதனை முறியடித்து விட்டோம் என்று உக்ரேனின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஒகஸ்டில், உக்ரேனின் தென்பகுதியான மிகோலைவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ஜெலன்ஸ்கியுடன் தொடர்புடைய உளவு தகவல்களை ரஷ்யாவுக்கு அனுப்ப முயன்றபோது, கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரலில் போலந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்கான சதி திட்டத்திற்கு உதவியது தெரியவந்தது.

இவை தவிர, ரஷ்ய குண்டுவெடிப்பு தாக்குதலின்போது, பல முறை சிக்க கூடிய அனுபவங்களை ஜெலன்ஸ்கி எதிர்கொண்டிருக்கிறார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )