இரு தொடைகளும் உரசி உரசி புண்ணாகிவிட்டதா ?
ஒரு சிலர் நடக்கும்போது இரு தொடைகளும் உரசி உரசி சருமத்தில் ஒரு வித உராய்வுகள், தடிப்புகள், புண்கள் ஏற்பட்டு நடக்கவே முடியாத நிலை ஆகிவிடும். இது அதிக எரிச்சலைக் கொடுக்கும்.
இந்த தொடை உராய்தல் பிரச்சினை, தொடைப் பகுதிகள் அதிக ஈரமாக இருக்கும்போது, ஈரத்துடன் உள்ளாடைகள் அணியும்போது, இறுக்கமான ஆடைகள், தொடைப் பகுதிகளில் இருக்கும் அதிக சதை ஆகியவற்றினால் உண்டாகிறது.
இந்த தொடை உராய்வுப் பிரச்சினையை வீட்டிலிருக்கும் சில பொருட்களைக் கொண்டே சரி செய்துவிடலாம்.
கற்றாழை
பாதிக்கப்பட்ட இடங்களில் கற்றாழை ஜெல்லை தடவ வேண்டும். இதிலிருக்கும் ஆன்டி பக்டீரியல் பண்புகள் குறித்த பகுதிகளில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கும்.
கடுகு எண்ணெய்
உராய்வதனால் ஏற்பட்ட புண்ணின் மீது கடுகு எண்ணெயுடன் சேர்த்து எலுமிச்சைச் சாறையும் கலந்து பூசுவதன் மூலம் விரைவில் எரிச்சல் நின்று காயம் ஆறிவிடும்.
கடுகு எண்ணெய்க்கு இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கும் ஆற்றல் அதிகம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை புண் இருக்கும் இடத்தில் பூசிவர தடிப்புகள், சிராய்ப்புகள் ஆகியன மறையும். இதில் ஆன்டி செப்டிக் பண்புகள் அதிகம்.