பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் !
பங்களாதேஷில் தங்கள் வீடுகள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதலை கண்டித்து இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த ஒகஸ்ட் 5 ஆம் திகதி பங்களாதேஷ் பிரதமா் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா இராஜிநாமா செய்தாா்.
அதன் பின்னா், அந்நாட்டில் உள்ள 52 மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக இரண்டு பங்களாதேஷ் இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அங்குள்ள இந்து கோயில்கள், வீடுகள், வணிக இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட இரண்டு இந்து தலைவா்களும் கொல்லப்பட்டனா்.
இந்தத் தாக்குதலை கண்டித்து பங்களாதேஷ் தலைநகா் டாக்கா மற்றும் சட்டாகிராம் பகுதியில் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் மற்றும் மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.