தேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறாரா திலித் ஜயவீர ?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் மவ்பிம ஜனதா கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர போட்டியிலிருந்து விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் முற்றிலும் போலியானது என மவ்பிம ஜனதா கட்சியின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
மேலும், அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் மவ்பிம ஜனதா கட்சியின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகள், பல்வேறு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைவின் கீழ் உருவாக்கப்பட்ட சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக வர்த்தகர் திலித் ஜயவீர அறிவிக்கப்பட்டு பிரசார நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கூட்டணியின் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிதிதுரு ஹெல உருமய கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.