இவ்வளவு நேரம் தூங்கினால் போதுமா ? ஆய்வில் வெளியான புது தகவல்
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நீண்ட ஆயுளுக்கும் போதுமான தூக்கம் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் எத்தனை மணி நேர தூக்கம் போதுமானதாக கருதப்படுகிறது..? வயதுக்கு ஏற்ப தூக்க நேரம் என்ன?
அதிகமான தூக்கம் அல்லது மிகக் குறைந்த தூக்கம் பெரும்பாலும் உடல் நோய்க்கான அறிகுறியாகும். நீங்கள் இவை இரண்டையும் செய்வதில்லை என்றாலும் உங்கள் வயதுக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக 7 முதல் 8 மணிநேர தூக்கம் என்பது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.
இந்த நிலையில், ஒரு நபருக்கு 4 மணி நேரம் தூக்கம் போதும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக டாக்டர் மனன் வோரா கூறியுள்ளார்.
சமீபத்திய, போட்காஸ்ட் நிகழ்ச்சியில் மருத்துவர் டாக்டர் மனன் வோரா உடல்நலம், தூக்கம், ஊட்டச்சத்து உள்ளிட்ட பலவற்றைப் பற்றிப் பேசினார். அப்போது, நான்குமணிநேர தூக்கம் கூட ஒரு நபருக்கு போதுமானது என்பதை நிரூபிக்கும் ஆராய்ச்சி ஆய்வுகள் உள்ளதாக கூறினார்.
தூக்கம் வருவதில்லை, இரவு முழுக்க விழித்தே இருக்கிறேன் என புலம்பி தள்ளும் 90-ஸ் மற்றும் 2K கிட்ஸ்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஓரளவுக்கு நிம்மதியை கொடுக்கலாம். எனினும், அவரவர் வயதுக்கு ஏற்ப உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வை கொடுப்பது, நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.