இலங்கை சுழல் வீரர் ஜயவிக்ரமவுக்கு எதிராக ஐ.சி.சி. மூன்று குற்றச்சாட்டு !

இலங்கை சுழல் வீரர் ஜயவிக்ரமவுக்கு எதிராக ஐ.சி.சி. மூன்று குற்றச்சாட்டு !

இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு விதியை மீறியதாக மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதற்காக தம்மை அணுகியது தொடர்பில் தாமதமின்றி
ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்க தவறியதாக ஜயவிக்ரம மீது ஐ.சி.சி.
குற்றம் சுமத்தியுள்ளது.

ஊழல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக அணுகியது தொடர்பிலான குறுஞ்செய்திகளையும் அவர் நீக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதில் அளிப்பதற்கு ஜயவிக்ரமவுக்கு 2024 ஓகஸ்ட் 6 ஆம் திகதி தொடக்கம் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜயவிக்ரம இலங்கை அணிக்காக இதுவரை 5
டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 5 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.

அவர் கடைசியாக 2022 ஜூன் 11 ஆம் திகதி பல்லேகலவில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஜயவிக்ரம 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரில் சம்பியன் கிண்ணத்தை வென்ற ஜப்னா கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.

அந்தப் பருவத்தில் அவர் ஒரு போட்டியில் மாத்திரம் ஆடி இரண்டு விக்
கெட்டுகளை வீழ்த்தினார்.

2024 எல்.பி.எல். தொடரில் அவர் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )