அமெரிக்க ஜனாதிபதி பைடன் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி பைடன் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைப்பெறவுள்ள நிலையில் இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 78)போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 81) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (வயது 59) ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் தோல்வியடைந்தால் கமலா ஹாரிஸ்க்கு அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெறாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

CBS செய்தி தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

“ட்ரம்ப் கூறியதில் அர்த்தம் உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தால் அமெரிக்காவே இரத்த களறியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்காவிட்டால் அமெரிக்காவில் இரத்தக் களறி ஏற்படும் என்று கடந்த மார்ச் மாதம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )