சிக்கன் பொப்கோர்ன் ; இனி வீட்டிலேயே செய்யலாம்

சிக்கன் பொப்கோர்ன் ; இனி வீட்டிலேயே செய்யலாம்

சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் சிக்கன் பிடிக்கும். அதிலும் சிக்கனை பொப்கோர்னைப் போல் செய்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும்.

சிக்கன் பொப்கோர்ன் எவ்வாறு செய்வதெனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் (எலும்பில்லாதது) – 250 கிராம்
  • முட்டை – 1
  • பால் – 1 மேசைக்கரண்டி
  • வெள்ளைப்பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • கோதுமை – 1/2 கப்
  • ப்ரட் – 4
  • சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
  • மசாலாத் தூள் – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சைச் சாறு – 1 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை நன்றாகச் சுத்தப்படுத்தி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும்.

கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வெள்ளைப்பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடங்கள் வரையில் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் ப்ரட் துண்டுகளை டோஸ்ட் செய்து மிக்ஸியில் போட்டு அரைத்து தூளாக்கிக்கொள்ள வேண்டும்.

ப்ரட் தூளில் சீரகத் தூள், மசாலாத் தூள் சேர்த்து கலந்துவைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, பாலையும் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

சிக்கன் துண்டுகளை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, அடுத்து கோதுமை மாவில் பிரட்டி, மீண்டும் முட்டை கலவையில் பிரட்டி, கடைசியாக ப்ரட் தூளில் பிரட்டி சூடாக்கிய எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.

மொறுமொறுப்பான சிக்கன் பொப்கோர்ன் ரெடி.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )