குளிர்சாதனப் பெட்டியை திறந்த சிறுமி உயிரிழப்பு
குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
இந்தியா, சென்னையில் தம்பதி ஒன்றுக்கு 3 பெண் குழந்தைகள். அதில் அவர்களது மூத்த மகள் ரூபாவதி வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியை திறந்துள்ளார். எதிர்பாராத விதமாக குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதில், சிறுமியின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
சம்பவத்தைப் பார்த்த குழந்தையின் தாய், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
CATEGORIES India