ஆடி மாதத்தில் திருமணம் முடிக்கலாமா ?
ஆடி மாதம் மிகவும் விசேஷமான, அற்புதமான மாதமாகும். இருப்பினும் இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் செய்யக்கூடாது என்ற தவறான கருத்து நிலவுகிறது.
இதன் பின்னணியில் நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள அற்புத விஷயங்களை தெரிந்து கொண்டால் ஆடி மாதத்தின் அற்புதம் நமக்கு புரியும்.
ஆடி மாதத்தில் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கம் கொண்டவர்கள், கோயிலுக்கு செல்வது தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்த்தனர்.
ஆடி மாதத்தில் பெண் கருவுற்றால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். கோடை காலமான சித்திரை மாதத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், அப்போது பிறக்கும் குழந்தைக்கும், தாய்க்கும் ஒரு இதமான காலமாக இருக்காது.
அதனால் ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிக்க வேண்டியிருக்குமே என்பதால் திருமணத்தை ஆடி மாதத்தில் தவிர்த்தனர்.
அதே நேரம் முக்கிய பல விசேஷங்களை செய்ய சிறப்பான மாதமாக இருக்கிறது.
ஆடி மாதத்தில் வீடு, நிலம் சார்ந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம் என்பதற்காகவே வாஸ்து, கிருஹப்ரவேசம், வேறு வீடு குடியேறுதல், புதிய நிலம், வீடு வாங்குதல் போன்ற விஷயங்களை செய்யலாம்.
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் தான் வாஸ்து பூஜை, வீடு க்ரஹபிரவேசம் செய்யக்கூடாது என ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது.
பொதுவாகவே, திருமணம், நிச்சயதார்த்தம், கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது எனவும் கூறப்படுகின்றது.
மற்றபடி ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் தாராளமாக மேற்கொள்ளலாம்.