பேனால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பேனால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பெண்ணின் ஒருவரின் தலையில் பேன்கள் இருந்ததால் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக சக பயணிகள் கூச்சலிட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் அப்போது தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விமான நிறுவனம் கூறிய காரணம் உண்மையில்லை என விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பேன் பிரச்னைக்கு பிறகு அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் 12 மணி நேரம் கழித்து மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )