பிரிட்டனில் குடியேற்ற எதிர்ப்பு வன்முறை !
பிரிட்டனில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தங்கியுள்ள ஹோட்டல்கள்,கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் தீவைக்கப்பட்டு குடியேறிகளுக்கு எதிரான ஆர்ப்பட்டம்
தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் பிரதமர் கெயிர்ஸ்டாமர், பொலிஸ் தலைவருடன் நேற்று அவசர பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.
வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சௌத்போட்டில் கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கடந்த ஒரு வாரமாக நாட்டில் பல பகுதிகளிலும் வன் முறைகள் வெடித்திருப்பதோடு 420க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவர் குடியேறியான கடும்போக்கு இஸ்லாமியவாதி என்று வதந் தி பரவிய நிலையிலேயே குடியேற்ற எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்புக் குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன.
எனினும் சந்தேக நபர் பிரிட்டனில் பிறந்த பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மீது கல்லெறிந்து, கடைகளில் கொள்ளையில் ஈடுபட்டு, பள்ளிவாசல்கள் மற்றும் ஆசியர்களுக்குச் சொந்தமான கடைகள் மீது தாக்குதலில் ஈடுபட்டு கலகக்காரர்கள் இனவாத வெறுப்புணர்வை தூண்டி வருவதாக உள்துறை அமைச்சர்
யுவெட்டே கூப்பர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் முகமூடி அணிந்த இளைஞர்கள் பல நகரங்களில் வன் முறையில் ஈடுபட்டதோடு, குடியேறிகள் நாட்டுக்குள் வருவதை குறிக்கும் வகையில் ‘படகுகளை நிறுத்து’ என்று கோசம் எழுப்பினர்