எமது அரசியலை வெளிநாடுகளில் முன்னெடுப்பது பிரயோசனமற்றது !
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மிகவும் அமைதியான வாழ்க்கை வாழும் நிலையில்,எமது நாட்டு அரசியலை வௌிநாடுகளில் முன்னெடுப்பது அவர்களின் வாழ்க்கையை சிக்கலுக்குள்ளாக்கும் செயலாகும் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியலை அந்த நாட்டில் முன்னெடுக்க செயற்படுவது எந்தளவு
பிரயோசனமானது என புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
JVPயினரால் குவைத் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில்
பங்கு பற்றிய 24 பேர்,அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
அது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
‘குவைத்தில் JVPயினர் ஏற்பாடு செய்த ‘அக்கரையில் நாம்’ என்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது கடந்த 2ஆம் திகதி 24 பேர் அந்த நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அதனையடுத்து அங்குள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளின் தலையீட்டினால் 24 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எந்த ஒரு இலங்கையரும் வெளிநாடுகளில் சிக்கல்களை எதிர் கொள்ளநேர்ந்தால், அந்நாட்டிலுள்ள தூதுவராலயங்கள் அவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளன.
எனவே, அவ்வாறான நிகழ்ச்சிகளை வெளிநாடுகளில் செய்வதானால் அந்த
நாட்டின் சட்டங்களுக்கு அமைய அவற்றை முன்னெடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும் எமது நாட்டு அரசியலை அந்த நாட்டில் முன்னெடுப்பது எந்தளவு பிரயோசனமானது என்பது புரியவில்லை ‘என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.