நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி 41 முன்னணி தொழிற்சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரி, நாட்டிலுள்ள 41 முன்னணி தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதன் சாதக பாதகங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள தொழிற்சங்கங்கள், அதனை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இச்சட்டம் நாட்டிலுள்ள மக்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் சட்டமாக காணப்படுவதாகவும் அதே நேரம் பிரஜைகளின் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக அது அமைந்துள்ளதாகவும் அந்த தொழிற்சங்கங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.