கருப்பட்டி வட்டிலப்பம்
சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் வட்டிலப்பம் என்றால் மிகவும் பிடிக்கும்.
அந்த வகையில், கருப்பட்டி வட்டிலப்பம் எவ்வாறு செய்வதெனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- முட்டை – 4
- சீனி – ஒரு மேசைக்கரண்டி
- கருப்பட்டி – 1 1/2 கப்
- தேங்காய்ப் பால் – 1/2 கப்
- ஏலக்காய் தூள் – 1/2 கரண்டி
- உப்பு – சிறிதளவு
செய்முறை
முதலில் தேங்காய் துருவி, அதனுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து, தேங்காய்ப் பாலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் முட்டையை நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கருப்பட்டியையும் தண்ணீரையும் சேர்த்து கரையும் வரை சூடுபடுத்த வேண்டும்.
தொடர்ந்து, தேங்காய்ப் பால், கருப்பட்டி கரைசல், பொடியாக்கிய சீனி அனைத்தையும் நன்றாகக் கலந்து கரைந்தவுடன் வடிகட்ட வேண்டும்.
பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி, கரைசலை சிறிய பாத்திரங்களில் ஊற்றி மூடியிட்டு 25 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
ஒரு கரண்டியால் வட்டிலப்பத்தை குத்திப் பார்த்தால் அது கரண்டியில் ஒட்டக் கூடாது.
இப்போது வட்டிலப்பம் பரிமாறத் தயார்.