அமெரிக்க இராணுவ ஜெனரல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் !
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அமெரிக்க இராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
இந்த பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. இஸ்ரேலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் பகுதியாக அமெரிக்க இராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த பயணத்துக்கு முன்னதாக மத்திய கிழக்கில் போர் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் சென்றார்.
ஜூலை 31 ஆம் திகதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது படுக்கை அறையில் ஏற்கெனவே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக முன்பு தகவல் வெளியானது.
ஆனால் ஈரான் இராணுவம் விடுத்த அறிக்கையில், 7 கிலோ எடையுள்ள குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் இஸ்மாயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
என கூறியிருந்தது.