பிலிப்பைன்சில் நிலநடுக்கம் : ரிச்டரில் 6.8 ஆக பதிவு !
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியீயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிண்டனாவ் தீவின் கிழக்கே பார்சிலோனா கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.