குறுகிய காலத்தில் பொருளாதார அபிவிருத்தி : ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு IMF பாராட்டு !

குறுகிய காலத்தில் பொருளாதார அபிவிருத்தி : ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு IMF பாராட்டு !

குறுகிய காலத்தில் நாட்டை ஸ்திரப்படுத்தி பொருளாதாரத்தை அபிவிருத்தி
செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள நடவடிக்கைகள் சர்
வதேச நாணய நிதியத்தின் பாராட்டை பெற்றுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்
போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க
அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,

“மூன்றாவது பரிசீலனையை இடையூறின்றி நிறைவு செய்வதற்கான
வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடினோம்.

அதன் மூலம் நான்காவது தவணையை தாமதமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
எங்களுக்கு இது மிகவும் முக்கியமானது.

நான்காவது தவணை வெளியீடு ஏதேனும் ஒரு காரணத்தால் தாமதமானால்
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக சில எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும்.

2023 இன் முதல் பாதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட வசதி இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டது.

அதன் முதல் தவணை மார்ச் 2023 இல் அங்கீகரிக்கப்பட்டது.

பின்னர் இரண்டாம் தவணை டிசெம்பர் மாதமும் மூன்றாம் தவணை கடந்த ஜூன் மாதமும் பெறப்பட்டது.

இதனால் இலங்கைக்கு தற்போது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது.
அத்துடன் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக இலங்கை வெற்றிகரமாக உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )