துளசி நீரை வெறும் வயிற்றில் குடித்தால் இவ்வளவு நன்மைகளா ?
இந்த துளசி நீரை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
துளசி இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சுத்தமாகும்.
துளசி உடல் வெப்பநிலையையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
அதே சமயம் துளசி இலைகள் உடல் எடையைக் குறைக்கும்.
மேலும் உடலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.
துளசி இலைகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கும் நீரை மழைக்காலங்களில் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சளி மற்றும் தொண்டை பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
துளசியை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி மற்றும் வாயுத்தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
காய்ச்சல் உடலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல்தான் முதல் அறிகுறி.
காலையில் எழுந்தவுடன் துளசி நீரை அருந்தினால் வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சலில் இருந்து விடுபடலாம். மேலும் துளசியில் உள்ள மருத்துவ குணத்தால் வைரஸ் தொற்றுகள் விரைவில் குணமாகும்.
துளசி தண்ணீர் செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி சிறிது துளசி இலைகளை போட்டு 2-3 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க வைத்து இறக்கவும்.
குளிர்ந்த பிறகு, தண்ணீரை வடிகட்டி சூடாகவோ அல்லது குளிராகவோ குடிக்கலாம்.