இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்
அத்தியாவசிய வேலைகளை தவிர அடுத்த சில நாட்களுக்கு லெபனானுக்கு செல்ல வேண்டாம் என இலங்கையர்களுக்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், சுமார் 6000 இலங்கையர்கள் தற்போது லெபனான் நாட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.