பொலிஸ் நிர்வாகப் பிரிவிற்கு பொறுப்பாக லலித் பத்திநாயக்க !

பொலிஸ் நிர்வாகப் பிரிவிற்கு பொறுப்பாக லலித் பத்திநாயக்க !

இலங்கை பொலிஸின் நிர்வாக நடவடிக்கைகளுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய நிலந்த ஜயவர்தனவை கடந்த மாதம் 18 ஆம் திகதி நடைபெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூட்டத்தின் போது கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து , குறித்த வெற்றிடத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராகவும் இலங்கை பொலிஸின் நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்குமான சிரேஷ்டபொலிஸ் அதிபராகவும் செயற்படுவாரெனத் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )