கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி இன்று (01) உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது. இதன்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது இந்திய மீனவர்களின் படகு கவிழ்ந்து குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஒருவரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )