காஸாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம்

காஸாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம்

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட பலர் பலியாகியுள்ளனர்.

இந் நிலையில், காசாவில் குழந்தைகள் போலியாவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் செய்திதொடர்பாளர் கூறும்போது,

“காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் கிருமிகள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்புகிறது. தடுப்பூசிகள் குழந்தைகளை சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை என்றார். காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறும்போது, போலியோ தொற்றுநோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )