ஈரான் ஜனாதிபதியாக பதவியேற்றார் மசூத் பெசஸ்கியான்
கடந்த மே மாதம் ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரசி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் ஈரானில்அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடந்தது.
இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனைத்தொடர்ந்து நேற்று (30) ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றுள்ளார்.
இந்த விழாவில் இந்தியா , துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
பதவியேற்பின்போது ‘புனித குரான் மற்றும் ஈரான் பிரஜைகளின் முன்னிலையில், இஸ்லாமிய குடியரசுக்கும், நாட்டின் அரசியலமைப்புக்கும் பதுகள்வளனாக இருப்பேன் என்று கடவுள் மீது ஆணையாக உறுதியேற்கிறேன்’ என்று மசூத் தெரிவித்தார்.