காலையில் எழுந்ததும் கண்கள் வீங்கியிருப்பது ஏன் ?

காலையில் எழுந்ததும் கண்கள் வீங்கியிருப்பது ஏன் ?

ஒரு சிலருக்கு காலையில் தூங்கி எழுந்தவுடன் கண்களில் ஒரு வித வீக்கத்தைப் பார்க்கலாம்.

எதனால் இவ்வாறு கண்கள் வீக்கத்துடன் காணப்படுகிறது? அவற்றை தவிர்க்க என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.

  • சரியான அளவு உறக்கம் இல்லாத காரணத்தினால், கண்களைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் விரிவடைந்து ஒருவித திரவத்தை கசிய விடும். இது தோலின் கீழ் பகுதியில் உருவாகி, கண்களைச் சுற்றியுள்ள பகுதியை வீக்கமாகத் தோன்றச் செய்யும். இந்தப் பிரச்சினையை சரி செய்ய சரியான அளவு உறங்க வேண்டும்.
  • சில வேளைகளில் நாம் அழுகும்போது கண்களைச்சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவான இரத்த ஓட்டம் காணப்படும். இது அப்பகுதியிலுள்ள இரத்த நாளங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து, அவற்றிலிருந்து கசிவு ஏற்பட்டு அது தோலுக்கடியில் வீக்கத்தை உருவாக்கும்.அழுவதை நிறுத்தி சிறிது நேரத்தில் கண்களில் கூல் கம்ரசர் (Cool compress)ஐ பயன்படுத்துவது வீக்கத்தை குறைக்கும்.
  • மழைக்காலம் வந்துவிட்டால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். இதனால் கண்களுக்கு கீழ் வீக்கம் ஏற்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
  • மதுப்பழக்கம் உடையவர்கள், காரம் அதிகமுள்ள உணவுப் பொருட்கள் உண்பவர்களுக்கு கண்களில் நீர் தேங்குவதால் ஒரு வித வீக்கத்தை ஏற்படுத்தும்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )