செவ்வாய் கிரகத்தில் பாறை கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் பாறை கண்டுபிடிப்பு

  நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 2020-ம் ஆண்டு விண்கலம் ஒன்றை அனுப்பியது.

அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் அதில் அனுப்பப்பட்ட ‘பெர்சிவியரன்ஸ்’ என்ற ரோவர் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது.

இந் நிலையில் அந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை ஒன்றை கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பழங்கால நதி பள்ளத்தாக்கான ‘நெரெட்வா வாலிஸ்’ன் வடக்கு விளிம்பு பகுதியை ஆய்வு செய்யும் போது அம்பு முனை வடிவ பாறையை பெர்சிவியரன்ஸ் கண்டெடுத்ததாக நாசா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

அந்த பாறையை எக்ஸ்-ரே மற்றும் லேசர்களை பயன்படுத்தி ஆய்வு செய்ததில் அந்த பாறையில் வெள்ளை கால்சியம் சல்பேட் நரம்புகள், சிவப்பு நிற நடுத்தர பகுதி மற்றும் சிறிய வெள்ளை பிளவுகள் இருப்பது தெரியவந்ததாக நாசா கூறியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாறை அங்கு பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை காட்டுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )