வெங்காய மாங்காய் தொக்கு
ஒரு சிலருக்கு மாங்காய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊறும். அப்படியென்றால் மாங்காயில் தொக்கு செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்?
வெங்காய மாங்காய் தொக்கு எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மாங்காய் – 1
- வெங்காயம் – அரை கிலோ
- மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
- கடுகு – தேவையான அளவு
- வெந்தயம் – அரை கரண்டி
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தையும் மாங்காயையும் தோல் நீக்கி, துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கரண்டி கடுகு, ஒரு மேசைக்கரண்டி வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்து, பின் அதனை இடித்துக்கொள்ள வேண்டும்.
அதே பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, கடுகு சேர்த்து பொரிந்தவுடன் துருவிய வெங்காயத்தை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
துருவிய மாங்காவையும் சேர்த்துக்கொள்ளவும். இதனை நன்றாகக் கிளறி, இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு வேகவிட வேண்டும்.
பின்னர் இதனுடன் இரண்டு கரண்டி மிளகாய் தூள், வெந்தய தூள், கடுகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
எண்ணெய் பிரிந்துவரும் வரையில் வேகவிட வேண்டும். இதனுடன் நாட்டுச் சர்க்கரை, அல்லது பொடித்த வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.