இணைய குற்றங்கள், வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்க உதவ வேண்டும் : ஆசியான் பிராந்திய மன்றத்திடம் இலங்கை கோரிக்கை !

இணைய குற்றங்கள், வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்க உதவ வேண்டும் : ஆசியான் பிராந்திய மன்றத்திடம் இலங்கை கோரிக்கை !

இணைய குற்றங்கள், வேலைவாய்ப்பு மோசடிகளை எதிர்த்துப்போராட ஆசியான் பிராந்திய மன்றத்திடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

பிராந்தியத்தில் இணையத்தள குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆசியான்பிராந்திய மன்றத்திடம் இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.

ஆசியன் பிராந்திய அமைப்பின் 31ஆவது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உரையாற்றுகையிலேயே இந்த அழைப்பை விடுத்தார்.

லாவோஸில் நடந்த ஆசியான் பிராந்திய மன்றத்தின் இந்த கூட்டத்தில், வெளியுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கூறியதாவது,

;பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் உட்பட வளர்ந்து வரும் சவால்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முயற்சிகளைத்தக்க வைத்துக்கொள்வதும் அவசியம்.

இணையம் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பு அமைப்புகளுக்கான சவால்களையும், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் சமாளிக்கவும் இம்மன்றம் செயல்பட வேண்டும்.

இணைய குற்றங்கள்மற்றும் பிராந்தியத்தின் சில பகுதிகளில் நடைபெறும் வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பது அவசியம் ‘ என்று வெளியுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )