முட்டை விலையை குறைக்க தீர்மானம் !
முட்டையை 38 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரட்ணசிறி அழககோன் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு மாதத்தின் பின்னர், 38 ரூபாவுக்கு முட்டைகளை விற்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாதாந்தம் 600,000 முட்டைகள் நுகர்வுக்காகத் தேவைப்படுகிறது தற்போது உற்பத்தியின் அளவு அதிகரித்துள்ளதால் டிசம்பர் மாதத்திற்குள் முட்டைகள் உபரியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், முட்டை இறக்குமதிக்கான செலவை உள்ளூர் முட்டை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தினால், உள்ளூர் விவசாயி மட்டுமின்றி நுகர்வோரும் பாதுகாக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வர்த்தக அமைச்சு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு தலா 43 ரூபாவுக்கு விற்பனை செய்ததாகவும்,உள்ளூர் முட்டைகளை தற்போது 42, 43, 44 ரூபாக்களுக்கு நுகர்வோர் வாங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.