அரசின் அபிவிருத்தி சமூக நல திட்டங்கள் சட்டவிரோத செயற்பாடுகள் இல்லை !

அரசின் அபிவிருத்தி சமூக நல திட்டங்கள் சட்டவிரோத செயற்பாடுகள் இல்லை !

அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி மற்றும் சமூகநல வேலைத்
திட்டங்கள் சட்டவிரோதமானதல்ல என்றும், இவ்வேலைத் திட்டங்களை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட முடியாதெனவும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்கவுக்கும் அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித்திட்டங்களால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பல தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுகளை மீறும் வகையில், அமைந்துள்ள இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்து ஜனாதிபதியின் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ,

‘இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையில் இருந்தது.

மக்களின் அடிப்படைத் தேவைகளைப்பூர்த்தி செய்ய முடியாமல் அரசாங்கமிருந்த பின்னணியில் பேரம் பேசவோ அல்லது தேர்தல் நடத்துவது தொடர்பாக கலந்துரையாடக்கூட முடியாத நிலைமை இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட்டதால், தற்போது பொருளாதாரம்
ஸ்திரம் அடைந்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வருமான இலக்குகளை அடைவதற்கு அபிவிருத்தி வேலைத் திட்டத்தை தொடர வேண்டியது அவசியமானது.

இந்த வேலைத்திட்டத்திற்கு தடையாக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் செல்வதை தவிர்க்க முடியாது.’

என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )