ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிட SLPP முடிவு !
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரொருவரை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின்
தலைமையில் கட்சியின் அரசியல் சபை மற்றும் கட்சித்தலைவர்களின் பங்
கேற்புடன் இடம்பெற்றுள்ள கட்சியின் அரசியல் சபை கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ,
‘இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பிலான தீர்மானத்தை மேற்கொள்வதற்காகவே நேற்றைய இந்த கூட்டம்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பெரும்பாலானோர் கட்சி தனித்து வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே கருத்துக்களை முன் வைத்தனர்.
சிலர் மாத்திரமே மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.
அதற்கிணங்க இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளரின் பெயரை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் சபை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் கட்சியின் அங்கீகாரமின்றி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வருவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் என தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ,
‘பொதுஜன பெரமுன கட்சி கட்சியின் சின்னத்திலேயே இம்முறை தேர்தலில் போட்டியிடும் .
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கட்சி கூடி ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த நிமிடம் வரை நாம் அவருக்கே
பூரண ஒத்துழைப்பை வழங்கினோம்.
அதன் பின்னரே கட்சி என்ற ரீதியில் நாம் மேற்படி தீர்மானத்தை மேற்கொண் டுள்ளோம்.
தனக்கு ஆதரவளிக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளையும் கட்சி நிராகரித்துள்ளது’
என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.