இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா ? சிறுநீர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் !

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா ? சிறுநீர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் !

நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா? இல்லையா? என்பதை சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடித்துவிடலாம்.

அதன்படி நமது வயிற்றிலோ அல்லது உடலில் வேறு ஏதேனும் பாகத்திலோ பிரச்சினைகள் இருந்தால், சிறுநீர் அதனை வெளிக்காட்டிவிடும்.

சில நேரங்களில் சுகாதாரப் பழக்கவழக்கங்களை சரியாக பின்பற்றாவிட்டாலும், சிறுநீர் பாதை நோய்த் தொற்றுக்கு ஆளாக வேண்டிவரும். அதேவேளை என்னதான் சுகாதாரப் பழக்கவழக்கங்களை சரியாக கவனித்தாலும்கூட பிறப்புறப்பில் தொற்று – (Urinary Tract Infection – UTI) ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இந்த UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று என்பதால், சிறுநீர் கழித்தலில் பிரச்சினை ஏற்படும்.

சரியான சிகிச்சையளிக்கப்படாவிட்டால், வயிறு மற்றும் சிறுநீரகங்களுக்கும் பரவும்.

சிறுநீர் தொற்றின் அறிகுறிகள்

  • சிறுநீர் கழிக்கும்போது ஒருவித எரிச்சல் அல்லது வலி.
  • சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல்.

சிறுநீர் நோய்த்தொற்றை நிர்வகிக்க நீர் மிகவும் முக்கியமானது. எனவே சரியான அளவில் தண்ணீர் குடித்தால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.

பக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீர் தொற்று

பக்டீரியாக்களினால் அநேகருக்க சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. UTI இன் பொதுவான காரணி பக்டீரியாவாகும்.

எனவே சுகாதாரத்தைப் பேணுவதற்கும் பக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் காரணங்களை கண்டறிந்து அவற்றின் அதிகரிப்பை தடுப்பதற்குமான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )