பிரபல பின்னணிப் பாடகி காலமானார்

பிரபல பின்னணிப் பாடகி காலமானார்

பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் உடல்நலக் குறைவால் தமது 69ஆவது வயதில் நேற்றிரவு (01) காலமானார்.

பிரபல பாடகி உமா ரமணன், சென்னை – அடையாரில் அவரது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அவர் 6,000 இற்கும் அதிகமான மேடை நிகழ்வுகளில் பாடியுள்ளதுடன் 35 வருடங்களுக்கு அதிகமான காலம் இசைத் துறையில் பயணித்துள்ளார்.

1980ஆம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரைத்துறையில் அவர் அறிமுகமானார்.

அத்துடன் பன்னீர் புஷ்பங்கள், கேளடி கண்மணி, ஒரு கைதியின் டயரி, தென்றலே என்னைத் தொடு, புதையல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )