விலை குறைப்பை அமுல்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை !
பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலைக்கழிவை மக்களுக்கு வழங்காமல் அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உடனடியாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
450 கிராம் பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.