அமெரிக்கா வந்த நேதன்யாகு ; வலுக்கும் போராட்டம்

அமெரிக்கா வந்த நேதன்யாகு ; வலுக்கும் போராட்டம்

இஸ்ரேல், காசா நகரின் மீது கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் 39,175 பலஸ்தீனிய மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பலஸ்தீன இஸ்ரேல் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜோ பைடன் மற்றும் அமெரிக்க தலைவர்களிடம் பேசுவார்த்தை நடந்த நேற்று முன் தினம் அமெரிக்கா வந்துள்ளார்.

நேதன்யாகுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை எதிர்க்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன் தினம் தலைநகர் வாஷிங்க்டன் யூனியன் கட்டிடத்தின் முன் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலஸ்தீன கொடியைக் கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து நேதன்யாகுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

நேதன்யாகுவை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள். நேதனயாகு நீ உள்ளே ஒளிந்துகொள்ள முடியாது, நீ செய்வது இனப்படுகொலை என்று கோஷம் எழுப்பினர். சில போராட்டக்காரர்கள் நேதன்யாகு நகருக்குள் நுழையும் வழியிலும் மறியல் செய்தனர்.

இதனால் போராட்டக்கார்கள் மீது பொலிஸ் கடுமையான அடக்குமுறையை உபயோகப்படுத்தியது. நகரின் சுவர்க்ளிலும், கொலம்பஸ் உள்ளிட்டவர்களின் சிலைகளிலும் கிராஃபிட்டி வரைந்து தங்களின் எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். கைகளில் ரத்தத்துடன் ஜோ பைடன் நிற்கும் படங்களை போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர்கள் வரைந்தனர்.

மேலும் அமெரிக்க கொடியையும், நேதன்யாகுவின் உருவ பொம்மையையும் போராட்டக்காரர்கள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை 200 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை பொலிஸார்  கைது செய்துள்ளனர். இதைதொடர்ந்து நேற்று ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை நேதன்யாகு சந்தித்து பேசிய நிலையில் வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் போராட்டக்காரர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில் அமெரிக்க கோடியை எரித்தது நாட்டுப் பற்றின்மையை காட்டுவதாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இந்த போராட்டங்களுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )