HIV தொற்றுக்கு புதிய மருந்து

HIV தொற்றுக்கு புதிய மருந்து

உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான HIV தொற்று பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த HIV தொற்று பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணும் மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவ ஆய்வாளர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் HIV மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், HIV தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 100 சதவீத செயல்திறனைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

ஆண்டுக்கு 2 முறை (6 மாதத்துக்கு ஒன்று) ஊசி மூலமாக செலுத்தப்படும் இந்த மருந்து மூலமாக HIV தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் குணமடையும் சாத்திய கூறுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

HIVயால் இளம்பருவ பெண்களை கொண்டு நடத்தப்பட்ட 3 கட்ட சோதனையின் மூலம் நிருபணமாகி உள்ளதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னரே சோதனையின் வெற்றியை பொறுத்து இந்த மருந்து விற்பனை சந்தைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )