“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கமாட்டோம்”

“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கமாட்டோம்”

பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாதென பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் சபையில் தெரிவித்துள்ளார்.

மேலும்  அவர்,  ‘’பொலிஸ் மா அதிபர் பதவியை தேசபந்து தென்னக்கோன் வகிக்கிறார். அதில் மாற்றமில்லை .ஜனாதிபதி நினைத்தபடி பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கவும் முடியாது. பொலிஸ் மா அதிபர் பதவி இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

பாராளுமன்றம் தான் அரசியலமைப்பு சபைக்கு பொறுப்பு. வேறு யாரும் அதற்கு வியாக்கியானம் கொடுக்க முடியாது. அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்த முடியாது. நீதிமன்றமும் அதனை செய்யமுடியாது. பாராளுமன்றம் மகத்துவம் மிக்கது. உயர்நீதிமன்றத்திற்கு இதில் அதிகாரமில்லை. எனவே பொலிஸ் மா அதிபர் மீதான உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை செல்லுபடியாகாது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )