ரணிலே புலிகளையும் பிரித்தார் ! மொட்டுக் கட்சியையும் பிரித்தார் !
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலிகளைப் பிரித்தது போன்று மொட்டுக் கட்சியினரையும் பிளவுப்படுத்தியுள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியதன் ஊடாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிளவடைந்தது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ,
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்கினோம்.
எமக்கு ஏற்புடையதற்ற செயற்பாடுகளை அவர் செய்தாலும், வார்த்தையில் கூட நாம. அவருக்கு மாறாக எதுவும் சொல்லவில்லை. எனினும், கட்சி என்ற விதத்தில், கட்சியை பிளவுப்படுத்தியதே அவர் செய்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்துவதில் மிகவும் கைத்தேர்ந்தவர். அவர் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நல்லாட்சி அரசாங்கம், ஜே.வி.பி. ஆகிய கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்தினார்.
அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையேயையும் பிளவை ஏற்படுத்தினார்.
நாட்டின் நலன் கருதி நாங்கள் அரசியல் தீர்வொன்றை எட்டவுள்ளோம்.
எமது கட்சிக்குப் பொருந்தாத விடயங்களுக்கு இணங்கும் ஜனாதிபதியோ அல்லது வேறு எவராகவிருந்தாலும் அவருடன் நாம் இணங்கப் போவதில்லை.
நாம் அரசியல் தீர்மானமொன்றை எடுப்போம். நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு உண்மையாகவே உதவி புரிந்தோம். ஆனால் அவர் பதிலுக்கு நமது மொட்டு கட்சிக்கு அவ்வாறு செய்யவில்லை.
அவரது வழமையான பழக்கம் அது. அவர் அதனைச் செய்கிறார். அவரைக் கொண்டு வரும் போது, நாம் அதனை அறிந்திருந்தோம்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் இன்றும் கலந்துரையாடுகின்றோம்.
சரியான இடத்திற்கு வருவாரேயானால், அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவோம். ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் அனைவருடனும் கலந்துரையாடுவோம். அதன் பின்னர் இறுதி தீர்மானத்தை எடுப்போம்.