புதனில் அதிக வைரங்கள் இருப்பதாக தகவல்

புதனில் அதிக வைரங்கள் இருப்பதாக தகவல்

சூரிய குடும்பத்தின் முதலாவது கிரகமான புதன் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அதிக வெப்பம் மிகுந்த கிரகமாக உள்ளது.

இந்நிலையில், புதன் கிரகத்திற்குள் மிக அதிக அளவில் வைரம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதன் கிரகத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பதாகவும், இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள்14 கி.மீ தடிமனில் இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், புதன் கோளில் உள்ள வைரத்தை சுலபமாக வெட்டி எடுக்க சாத்தியம் இல்லை என்று ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற அறிவியல் இதழில் தகவல் வெளியாகியுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )