ஊறுகாய் வைக்காததால் ரூ. 30,525 அபராதம்

ஊறுகாய் வைக்காததால் ரூ. 30,525 அபராதம்

சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.3,525 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் தன் உறவினரின் நினைவு தினத்தையொட்டி, 25 பேருக்கு அன்னதானம் வழங்குவதற்காக, 2022ஆம் ஆண்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பணம் செலுத்தி, 25 பார்சல் சாப்பாடு வாங்கிய நிலையில், அதற்கான ரசீதை தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் துண்டு சீட்டில் எழுதி கொடுத்துள்ளார்.

வீட்டிற்கு சென்ற ஆரோக்கியசாமி, உணவு பொட்டலங்களை முதியோருக்கு வழங்கியபோது, அதில் ஊறுகாய் இல்லை. ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது, ஊறுகாய் வைக்காதது உறுதியானது.

இதையடுத்து, ஊறுகாய்க்கான 25 ரூபாயை திரும்பக் கேட்டுள்ளார் ஆரோக்கியசாமி. ஆனால், ஹோட்டல் உரிமையாளர் தர மறுத்துவிட்டார்.

இதுகுறித்து ஆரோக்கியசாமி, விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர், பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காததால், ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ 30,000, வழக்கு செலவிற்கு ரூ 5,000 மற்றும் ஊறுகாய் பக்கெட்டுகளுக்குரிய 25 ரூபாய் என எல்லாவற்றையும் சேர்த்து 30,525ரூபாயை, 45 நாட்களில் வழங்க ஹோட்டல் உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )