ஜனாதிபதி அலுவலகத்தில் விழுந்த குப்பை பலூன்
தென் கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
இதனால் தென் கொரியா-வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே சில நாட்களாக வடகொரியா, ராட்சத பலூன்களில் குப்பைகளை நிரப்பி தென் கொரியாவுக்குள் அனுப்பி வருகிறது. இதற்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந் நிலையில் குப்பை பலூன்கள் தென் கொரியாவின் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விழுந்தன. வட கொரிய பலூன்கள் இன்று காலை எல்லையைத் தாண்டி தலைநகர் சியோலுக்கு வடக்கே பறந்தன.
அந்த பலூன்கள் தென் கொரியாவின் ஜனாதிபதிஅலுவலக வளாகத்தில் விழுந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
CATEGORIES World News