இனி காதுகளை இப்படி சுத்தம் செய்யுங்கள்

இனி காதுகளை இப்படி சுத்தம் செய்யுங்கள்

நாம் வெளியில் சென்று வரும்போது சூழலிலிருந்து வெளிவரும் தூசிகள் எமது காதுகளுக்குள் செல்ல நேரிடும். இது அழுக்குகளாக மாறிவிடும்.

இந்த அழுக்குகள் தானாக வெளியே வந்துவிடும் என்றாலும் காதுகளை சுத்தப்படுத்தியாக வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த வழிகள் உங்களுக்கு பலனளிக்கும்.

காதுகளை அடிக்கடி சுத்தம் செய்வது பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

காதுகளை சுத்தம் செய்ய பயன்படும் பட்ஸ், பருத்தி துணிகள் ஆகியன அழுக்குகளை இன்னும் காதுக்குள் தள்ளி பாதிப்பை அதிகப்படுத்தும்.

இவ்வாறு காதுகளுக்குள் சேமிக்கப்படும் அழுக்குகளால் பக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

அதனால் காதுகளின் வெளிப்புற பகுதிகளை மட்டும் சுத்தமான துணியைக் கொண்டு சுத்தம் செய்யலாம்.

ஒருபோதும் தலைக்கு பயன்படுத்தும் ஹேர்பின்கள், பின்னூசி, பறவைகளின் இறகுகள் ஆகியவற்றை காதுகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

குளித்ததன் பின்னர் காதுகளில் தேங்கியிருக்கும் ஈரத்தை துணியைக் கொண்டு துடைக்க வேண்டும்.

உங்களுக்கு பாடல்கள் கேட்பதற்கு மிகவும் பிடிக்கும் என்றால், அதிகமான சத்தத்தில் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு சிலருக்கு காதுகளில் வலி, சீழ் வடிதல், வீங்குதல், கேட்பதில் சிரமம், அசௌகரியம் போன்ற அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )