கிருமிகளின் இருப்பிடமாகும் கைகள்
முகத்துக்கு கொடுக்கும் முன்னுரிமையை பெரும்பான்மையானோர் கைகளுக்கு கொடுப்பதில்லை.
பல தொற்றுக்கள் கைகளின் மூலம் தான் உடலுக்குள் பரவுகின்றது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனால் உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாக கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
கைகளை தேய்த்துக் கழுவினால் மட்டும் போதாது. சவர்க்காரம் அல்லது ஹேண்ட் வொஷ் உபயோகித்து கழுவ வேண்டும்.
மென்மையான சவர்க்காரத்தை உபயோகித்தே கைகளை கழுவ வேண்டும்.
ஆடைகளை துவைக்க பயன்படும் சவர்க்காரத்தைக் கொண்டு ஒருபோதும் கைகளைக் கழுவக் கூடாது. ஆடைகள் கழுவப் பயன்படும் சவர்க்காரங்களில் கடினத்தன்மை அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் கைகளை விரைவாக உலர்வடையச் செய்துவிடும்.
எந்தவொரு வேலையையும் செய்த பின்னர் கைகளைக் கழுவி ஒரு துணியைக் கொண்டு துடைத்துவிட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் கைகள் மென்மையாகும். அத்துடன் கைகளில் ஏற்படும் சுருக்கத்தையும் நீக்கும்.
வெளியில் செல்லும்போது கைகளுக்கு லோஷன் பூசிக்கொள்வது நல்லது.
அடிக்கடி கைகளைக் கழுவும்போது நோய்த்தொற்றுக்கள் நம்மை நெருங்காது.