முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருவதற்கு அமைச்சரவை அனுமதி

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருவதற்கு அமைச்சரவை அனுமதி

கொவிட் -19 தொற்று நோய் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் முஸ்லிம்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொவிட்-19 தொற்று நோயின் போது உடல்களை தகனம் செய்ததன் காரணமாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட மனக்குறைகளுக்காக மன்னிப்புக் கோரி அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

கொவிட் – 19 தொற்றுநோய்க் காலப்பகுதியில் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பாக சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில் குறிப்பிட்டவாறு, வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் பூதவுடல்களை அடக்கம் செய்வதற்கான பொறிமுறையாக உடற்தகன முறை விதந்துரைக்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய, கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகிய 276 முஸ்லிம்களின் பூதவுடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது.  அதன்பின்னர், நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனக் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )